விஜயை என்னால் மறக்க முடியாது!! அமலாபால் அழுகின்றார் Share

விஜய்யை என்னால் மறக்க முடியாது. அவரை பிரிந்தபோது மிகவும் அழுதேன். அவரை இன்னும் காதலிக்கிறேன். இனிமேலும் காதலிப்பேன் எங்கள் அமலாபால் கூறுகிறார்கள்

பெரிய கதாநாயகிகளான நயன்தாரா, திரிஷா இருவரும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து அமலாபாலுக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது. அவரிடம் கதை சொல்ல வரும் பிரபல டைரக்டர்களிடம், தனக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். தன்னிடம் கால்ஷீட் கேட்டு வரும் புதுமுக டைரக்டர்களிடம், படத்தின் கதையை 2 நிமிடம் ஓடக்கூடிய குறும் படமாக எடுத்து வரும்படி கூறுகிறாராம்.

கணவர் டைரக்டர் விஜய்யை பிரிந்தது பற்றி அவர் கூறும்போது, “விஜய்யை என்னால் மறக்க முடியாது. அவரை பிரிந்தபோது மிகவும் அழுதேன். அவரை இன்னும் காதலிக்கிறேன். இனிமேலும் காதலிப்பேன். என் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் அவர்” என்கிறார்!

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com