வைரமுத்து பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து! Share

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவுக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

 

மேலும் மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

திரைப்பாடல்கள் வழியாகவும், இலக்கியப் படைப்புகள் வழியாகவும் தமிழர்களின் நெஞ்சில் நிலைத்து நின்று, தமிழின் பெருமையை இந்திய அளவிலும் உலக அளவிலும் உயர்த்தும் பணியில் சிறப்பாகவும் பொறுப்பாகவும் செயல்பட்டு வரும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த பாடலாசிரியராக 7 முறை தேசிய விருது பெற்ற சாதனையாளர். மத்திய மாநில அரசுகளின் விருதுகள் பலவற்றைப் பெற்ற பெருமைக்குரியவர். சமூக அக்கறையுடன் ஏராளமான படைப்புகளை வழங்கி வருபவர். தமிழில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்ட வெற்றியாளர்.

பன்முகத்தன்மை கொண்ட கவிப்பேரரசு; கலைஞரை தனது தமிழ் ஆசானாக ஏற்று, திராவிட இயக்கத்தின் வழிவந்த படைப்பாளியாகத் தன்னை முன்னிறுத்தியவர். அத்தகைய பெருமைக்குரிய கவிப்பேரரசு இன்னும் பல சிறந்த படைப்புகளைத் தமிழுக்கு வழங்கும் வகையில் பல்லாண்டுகள் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளார்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com