சரவணா ஸ்ரோஸ் முதலாளியிடம் ஓவியா வாங்கிய பணம் எவ்வளவு தெரியுமா? Share

பிக் பாஸ் புகழ் ஓவியா கலைவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். முதல் படம் வெற்றியடைந்தாலும் ஓவியாவிற்கு அதன் பிறகு கலகலப்பு தவிர வேறெந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.தனது தாயின் உடன் நிலை சரியில்லாததால் அவரின் மருத்துவ செலவிற்காக கிடைத்த படத்தில்
எல்லாம் நடித்துக்கொண்டிருந்தார். நாயகர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை படம் நடித்தால்
போதும் என்று நடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தற்போது தனது புதிய
படங்களுக்கான சம்பளங்களை ஏற்றி இருப்பதாக செய்தி வருகின்றது.

மேலும் கடை திறப்புகளுக்கு முன்பெல்லாம் 50 ஆயிரம் வாங்கிகொண்டிருந்த ஓவியா நாளை OMR
சாலையில் திறக்கப்பட உள்ள சரவணா ஸ்டோர்ஸ் புதிய கடைக்கு திறப்பு விழா மற்றும்
விளம்பரத்திற்கு மட்டும் 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இப்படி சம்பளத்தை ஒரேயடியாக 20 மடங்கு உயர்த்தி இருப்பது அனைத்து தயாரிப்பளர்களுக்கும்
வயிற்றில் புளியை கரைக்கிறதாம்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com