நயன்தாரா போல அந்த மாதிரி படங்களில் நடிக்கிறேன்… Share

அரவிந்சாமியுடன் அமலாபால் நடித்திருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இதில் நடித்த அனுபவம் பற்றி அமலாபாலிடம் கேட்டபோது…

 

‘‘இந்த படத்தில் காரைக்குடி பெண்ணாக நடித்திருக்கிறேன். மூக்குத்தி, பாவாடை தாவணி, புடவை அணிந்து வருகிறேன். குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்கும் படமாக சசிகணேசன் இதை இயக்கி இருக்கிறார். எப்போதும் வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பலருடைய வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் படமாக இது இருக்கும்.

என்னுடைய சினிமா வாழ்க்கையில் இன்றைய காலத்தை சிறந்ததாக கருதுகிறேன். ஒரு உதவி இயக்குனரை போல் எல்லா வேலைகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். கதை, படத்தொகுப்பு, இயக்கம் எல்லாவற்றையும் கவனமாக பார்ப்பேன்.

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ கலகலப்பான படம். இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு கிடைத்த நல்ல நண்பர் அரவிந்சாமி. நிறைய வி‌ஷயங்கள் குறித்து அவரிடம் கலந்து பேசுவேன். இந்த படத்திற்காக சொந்த குரலில் பேசியிருக்கிறேன்.

பெண்களை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் வெற்றி பெறுவது நல்லவி‌ஷயம். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ எல்லோருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. நானும் இதுபோன்று சமூக பிரச்சினையை மையமாக கொண்ட ‘அதோ அந்த பறவை’ என்ற படத்தில் நடிக்கிறேன். விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்கள்.

உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி, யோகா செய்கிறேன். எனது மகிழ்ச்சிக்கு யோகா முக்கிய காரணம்’’ என்றார்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com