ஸ்ருதியின் பேஸ்புக் பக்கத்தை பொலீசார் முடக்கினர் Share

கோவையை சேர்ந்த நடிகை ஸ்ருதி மீது, நெல்லை இன்ஜினியர் ஒருவர் 3 லட்சம் பறிகொடுத்ததாக நேற்று புகார் தெரிவித்துள்ளார்.சேலம் எடப்பாடி அருகேயுள்ள காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (32). ஜெர்மனி நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் மைதிலி என்ற ஸ்ருதி (21). இவரின் தாய் சித்ரா, திருமண தகவல் மையம் நடத்தி வந்தார். இதில், ஸ்ருதியின் ஜாதகம், போட்டோவை பதிந்திருந்தார்.

இதை பாலமுருகன் பார்த்துவிட்டு ஸ்ருதியிடம் தொடர்புகொண்டு பேசினார். ஆனால், திருமணம் செய்வதாககூறி பாலமுருகனிடம் ஸ்ருதி ₹41 லட்சம் ஏமாற்றினார்.

இதுதொடர்பாக பாலமுருகனின் புகாரின்பேரில், கடந்த 2 தினங்களுக்குமுன் ஸ்ருதி, அவரது தம்பி சுபாஷ், தாய் சித்ரா உள்பட 5 பேரை கோவையில் பொலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர், இதுபோல பலரிடம் பல கோடி ரூபாய் சுருட்டியது தெரிய

வந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வரும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து (30), கோவை சைபர் கிரைம் பொலீசாரை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், `மேட்ரிமோனியல் தகவல் அடிப்படையில் ஸ்ருதியை தொடர்பு கொண்ட போது, என்னை திருமணம் செய்வதாக உறுதியளித்தார்.

இதனைதொடர்ந்து ஸ்ருதி அவசர தேவைக்காக ₹3 லட்சம் கேட்டார். இந்த பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தினேன்.

அதற்கு பிறகு அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை’ என தெரிவித்துள்ளார். இதுபோல், மேலும் 2 பேர், வெளிநாட்டில் இருந்து புகார் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி சைபர் கிரைம் பொலீசார் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் ஸ்ருதியை கஸ்டடி எடுத்து விசாரித்து அவரது சொத்துக்களை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சினிமா துறையில் அவருக்கு யாராவது. உதவி செய்தார்களா, பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது’’ என்றனர். பேஸ்புக் முடக்கம்: ஸ்ருதியின் பேஸ்புக்கில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வாலிபர்கள் தொடர்பில் உள்ளனர். இவர்களில் பலர், ஸ்ருதி தங்களை காதலிப்பதாக இன்னும் நம்பி கொண்டிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த பொலீசார் ஸ்ருதியின் பேஸ்புக் பக்கத்தை முடக்கினர்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com