கீழாடையை அடிக்கடி உயர்த்திப் பார்ப்பார்!! பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..! Share

பல வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் மீது, பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

பல வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் மீது, பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

இப்புகார் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

”தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்”, ”தி பக்கெட் லிஸ்ட்”, ”இன்விக்டஸ்” உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளவர் மார்கன் ஃப்ரீமேன். 80 வயதாகும் அவர் சுமார் 50 ஆண்டுகளாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் 16 பெண்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

மார்கன் ஃப்ரீமேன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 பெண்களும், அவர் பிற பெண்களிடம் தவறாக நடந்தபோது அதை பார்த்ததாக 8 பெண்களும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோயிங் இன் ஸ்டைல் படத்தில் ப்ரொடக்ஷன் உதவியாளராக பணியாற்றியபோது பல மாதங்களாக மார்கன் ஃப்ரீமேன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, படப்பிடிப்பு தளத்தில் என் அனுமதி இல்லாமல் மார்கன் ஃப்ரீமேன் என் பின்பக்கத்தை தொட்டு தடவுவார். உள்ளாடை அணிந்திருக்கிறாயா என்று கேட்டு அடிக்கடி என் ஸ்கர்ட்டை தூக்க முயன்றார். அவர் ஸ்கர்டை தொட்டதும் நான் விலகிச் சென்றுவிடுவேன். அவரின் தொல்லையை பார்த்த நடிகர் ஆலன் ஆர்கின் இதை உடனே நிறுத்துமாறு கூறியதும் மார்கன் அதிர்ச்சி அடைந்தார் என அந்த இளம் பெண் தெரிவித்தார்.

நவ் யூ சீ மி படத்தின் மூத்த ப்ரொடக்ஷன் தொழிலாளி பெண் கூறியபோது.. :-

”மார்கன் ஃப்ரீமேன் வருகிறார் என்றால் பெண்கள் யாரும் மார்பகம் தெரியும்படியோ, பின் பக்கம் தெரியும்படியோ, டைட்டான உடையோ அணியவே கூடாது” என்றார்.

மேலும், 16 பெண்கள் புகார் தெரிவித்த பிறகு மார்கன் ஃப்ரீமேன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதாவது, ”நான் யாரையும் அசௌகரியமாக ஃபீல் பண்ண வைக்க மாட்டேன் என்பதை என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

என்னால் அசௌகரியமாக ஃபீல் பண்ணியவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் வேண்டும் என்று செய்யவில்லை” என்று மார்கன் ஃப்ரீமேன் தெரிவித்துள்ளார்.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com