ராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ் Share

சின்னத்திரை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் தொடர் ராஜா ராணி. இதில் செம்பா எனும் கதாப்பதிரத்தில் நாயகியாக நடித்திருப்பவர் நடிகை ஆல்யா மானசா. இவர் மானாட மயிலாட எனும் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

இவருக்கு ஜோடியாக குளிர் 100 டிகிரி மற்றும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் சஞ்சீவ் அந்த சீரியலில் நடித்து வருகிறார். இவர்களது ஜோடி பொருத்தமானது சீரியல் ரசிகர்களுக்கு பிடித்து போனதை தொடர்ந்து, இருவரும் நிஜவாழ்விலும் காதலிப்பதாக வதந்திகள் பரவ துவங்கியது.
ராஜா ராணி ஆல்யா மானஸாவிற்காக உதவி இயக்குனரை தாக்கிய நடிகர் சஞ்சீவ்

இதற்கு இருவருமே மறுப்பு தெரிவித்து விட்ட நிலையிலும் தொடர் காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர் இந்த ராஜா மற்றும் ராணி.

சில நாட்களுக்கு முன்பு ஆல்யா மான்சாவின் பிறந்தநாளுக்கு 23 பரிசுகளை வழங்கி இருந்தார் சக நடிகர் சஞ்சீவ், இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார் ஆல்யா. அதுமட்டுமல்லாது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை  ‘வித் மை பேபி’ எனும் தலைப்பில் பதிவிட்டும் இருந்தார்.
ராஜா ராணி ஆல்யா மானஸாவிற்காக உதவி இயக்குனரை தாக்கிய நடிகர் சஞ்சீவ்

இவற்றால் இவர்களின் காதல் குறித்த வதந்திகள் மேலும் வலுவடைந்திருந்த நிலையில், ஆல்யாவிற்காக உதவி இயக்குனர் ஒருவருடன் சஞ்சீவ் சண்டையிட்ட தகவலும் தற்பொழுது வெளிவந்துள்ளது.

ஆல்யா, ஏதோ ஒரு பிரச்சனையில், உதவி இயக்குனர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட சம்பந்தமே இல்லாமல் அதில் நுழைந்த சஞ்சீவ், அந்த உதவி இயக்குனரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற தகவல்கள் நட்பையும் தாண்டிய ஒன்று இந்த சீரியல் ஜோடிகளுக்கு இடையே இருப்பதாகவும் கிசு கிசுக்க வைத்துள்ளது.

loading...

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com