வீட்டை காலி செய்வதில் தகராறு: தொழிலாளி அடித்துக் கொலை Share

ஆம்பூர் இந்திராநகர் முதல் தெருவை சேர்ந்த சதாசிவம் மகன் சுரேஷ் (வயது 36). டீ கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இதற்காக சுரேஷ் அட்வான்சாக ரூ.80 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முருகன் வீட்டை விற்பனை செய்வதற்காக சுரேஷை காலி செய்யும்படி கூறியுள்ளார். அதற்கு சுரேஷ் முன்பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து ரூ.66 ஆயிரம் திருப்பி வழங்கப்பட்டது. மீதி 10 ஆயிரத்தை காலி செய்யும்போது வாங்கிக் கொள்ளும்படி முருகன் கூறியுள்ளார்.

நேற்று முருகன், சுரேஷிடம் சென்று வீட்டை உடனடியாக காலி செய்யும்படி கூறியுள்ளார். இதில் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முருகன், சுரேஷை பிடித்து தள்ளினார். இதில் கீழே விழுந்த சுரேஷ் மயக்கம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுரேஷை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து சுரேஷின் மனைவி செல்வி, தனது கணவரை முருகன் அடித்து கொலை செய்து விட்டதாக டவுன் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்துபோலீசார் முருகனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com