கைப்பையில் மடித்து கையுடன் எடுத்து செல்லும் மோட்டார் சைக்கிள். இங்கிலாந்து மாணவன் சாதனை. Share

தற்போதைய பரபரப்பான வாழ்வில் இரண்டு சக்கர வாகனங்கள் இல்லாதவர்களே இல்லை எனலாம்

அந்த அளவிற்கு இரண்டு சக்கர வாகனங்கள் மனிதனின் வாழ்வில் இன்றியமையாததாக இருக்கின்றது. ஆனால் இரண்டு சக்கர வாகனங்கள்  வைத்திருப்பவர்கள் மிகப்பெரிய கவலையே அதனை பாதுகாப்பது மற்றும் அவற்றை நிறுத்துவதற்குரிய இடத்தை கண்டுபிடிப்பது ஒன்றுதான்.

பொது இடத்தில் வாகனத்தை நிறுத்தினால், நாம் திரும்பி வரும் வரையில் அந்த வாகனம் அதே இடத்தில் இருக்குமா? என்ற கவலையுடன் நாம் வாழவேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இதற்கு தீர்வு ஏற்படும் வகையில் ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளார். இந்த மாணவர் ஒரு புதிய வகை மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிளை நாம் பயன்படுத்திய பிறகு அதை அப்படியே மடக்கு, நமது கைப்பையின் உள்ளே வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் இதன் சிறப்பு.

George Mabey என்ற 22 வயது மாணவர் ஒருவர் அலுமினியத்தால் செய்த மோட்டார் சைக்கிளின் மொத்த எடையே 5கிலோதான். இந்த மோட்டார் சைக்கிளை தேவைப்படும்போது உபயோகித்துவிட்டு, அதன்பின்னர் அதை சுருட்டி கைப்பையில் வைத்துக்கொள்ளலாம். இதன் விலை $1680 ஆகும். மிக விரைவில் இந்த புதிய மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வரவுள்ளது.

லண்டன் London South Bank University என்ற பல்கலைக்கழகத்தில் காட்சிக்காகவும், டெமோ செய்து காட்டுவதற்காகவும் இந்த மோட்டார் சைக்கிள் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 35 இன்ச் உயரமும், 11.7 இன்ச் அகலமும் உள்ள இந்த மோட்டார் சைக்கிள் சராசரி மனிதர் ஒருவரை சுமந்து செல்லும் அளவுக்கு திறன் உடையது. இந்த புதிய வகை மோட்டார் சைக்கிளுக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..