மன்னார் வளைகுடாவில் அதிசய கடல் பசு! (Photos) Share

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மரைக்காயர் பட்டிணம் கடற்பகுதியில் 7அடி நீள அரிய வகை கடல் பசு ஒள்று இறந்தநிலையில் இன்று செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.

 

மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில், டொல்பின், கடல் பசு, திமிங்கிலம் உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக வசிக்கின்றன.

இவை கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ண மாற்றங்கள், விபத்துகள் மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா தெற்கு கடற்பகுதி மரைக்காயர் பட்டிணத்தில் இன்று செவ்வாய்கிழமை 7 அடி நீளமும், 4 அடி சுற்றளவும் சுமார் 200 கிலோ எடையும் கொண்ட ஆண் கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இந்த மீனை வனத்துறையினர் பிரேதப் பரிசோதனை செய்த பின்னர் மரைக்காயர் பட்டிணம் கடற்கரையில் புதைத்தனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..