பிரபஞ்சம் எவ்வாறு உருவாகியது? ஆராய்ச்சியை மீண்டும் தொடங்கிய விஞ்ஞானிகள் (வீடியோ இணைப்பு) Share

பிரபஞ்சம் உருவானது எவ்வாறு என்பதை கண்டுபிடிக்க ‘பிக் பேங்’ எனப்படும் ‘பெரு வெடிப்பு’ ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர்.

 

சுமார் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் “Big Bang” எனப்படும் ’பெரு வெடிப்பு’ ஏற்பட்டு சூரிய குடும்பம் உள்ளிட்ட பிரபஞ்சம் தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.

இருப்பினும், ’பெரு வெடிப்பு’ மூலமே பிரபஞ்சம் தோன்றியது என்பதை 100 சதவிகிதம் விஞ்ஞானிகளால் உறுதியாக நிரூபிக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து, பிரபஞ்சம் உருவான விதம் மற்றும் பிரபஞ்சத்தில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற மர்மங்களை கண்டறிய செயற்கையான ‘பெரு வெடிப்பு’ முயற்சிகளை விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.

European Organization for Nuclear Research (CERN) என்ற ஆராய்ச்சி கழகம் கடந்த சில ஆண்டுகளாக Large Hadron Collider (LHC) என்ற இயந்திரத்தின் மூலம் செயற்கை ’பெரு வெடிப்பு’ குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

சுவிஸ் நகரமான ஜெனிவாவிற்கு அருகில் அமைந்துள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில் உள்ள Large Hadron Collider (LHC) இயந்திரம் கடந்த இரண்டு வருடங்களாக செயல்படுத்தப்படாமல் இருந்தது.

தற்போது, சுவிஸ் மற்றும் பிரான்ஸ் எல்லை புவி பரப்பிற்கு கீழ் சுமார் 27 கிலோ மீற்றர் தொலைவில் புதிதாக ஒரு மின் சுற்று ஒளிவீச்சு உத்திரத்தை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

மேலும், ஆராய்ச்சி மையத்தில் இயந்திரங்கள் மற்றும் மின் இணைப்பு சாதனங்களை பழுது பார்க்கும் பணியும் முடிவடைந்துள்ளது.

சுமார் 144 மில்லியன் பிராங்குகள் செலவில் முடிக்கப்பட்டுள்ள இந்த பணிகளை தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆராய்ச்சியை மீண்டும் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஆராய்ச்சியில் துகள்களை ஒன்றோடு ஒன்று மோத விடுவதால் ஏற்படும் ஆற்றலின் (Energy) அளவு, கடந்த ஆற்றலை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எதிர்வரும் யூன் மாதத்தில் முழு முயற்சியுடன் தொடங்கப்படும் இந்த ஆராய்ச்சியின் முடிவில் பிரபஞ்சம் உருவாக்கம் குறித்த பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..