சூரியனை விட பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு Share

சூரியனை விட 8 மடங்கு பெரியதும், 300 மடங்கு பிரகாசமான ஒரு பெரிய நட்சத்திரம் உருவாகியுள்ளது.

 

1996ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் National Autonomous University of Mexico (UNAM) அமைப்பை சேர்ந்த கார்லஸ் காரஸோ கொன்சாலேஸ்(Carlos Carrasco-Gonzalez) தலைமையிலான விஞ்ஞானிகள் ஒரு ஹைட்ரஜன் வாயுக் கூட்டம் ஒன்று சேருவதை கண்டுபிடித்தனர்.

இந்த வாயுக் கூட்டம் கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று கலந்து தற்போது புதிய நட்சத்திரமாக உதயமாகியுள்ளது.

இது பூமியில் இருந்து 4200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. சூரியனைவிட எட்டு மடங்கு பெரிதாகக் காணப்படுகிறது, மேலும் சூரியனைவிட 300 மடங்கு அதிகமாகப் பிரகாசிக்கிறது.

இந்த நட்சத்திரத்துக்கு விஞ்ஞானிகள் W75N(B)-VLA2 என்று பெயரிட்டுள்ளனர். இந்த நட்சத்திரத்தின் மூலம், விண்வெளியில் பல்வேறு ரகசியங்களை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..