சிவமந்திர விரதம் Share

கீழ் உள்ள சிவமந்திரங்களை வாரத்தின் முதல் நாள் ஒரு திங்கட்கிழமையன்று விரதம் இருந்து தொடங்கவும். எந்த ரீதியான துன்பங்களை நீங்கள் அனுபவிக்கிறீர்களோ

எந்த ரீதியிலான தேவை வேண்டும் என நினைக்கிறீர்களோ அதற்குரிய மந்திரம் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு தினசரி 108 முறையோ 1008 முறையோ ஜெபித்து வரவும்.

சிவனருளால் உங்கள் பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். இந்த சிவ மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்யுங்கள் :

நங்சிவாயநம – திருமணம் நிறைவேறும்
அங்சிவாயநம – தேக நோய் நீங்கும்
வங்சிவாயநம – யோக சித்திகள் பெறலாம்.
அங்சிவாயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலிநமசிவாய – வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவாய – விரும்பியது நிறைவேறும்
ஐயும்நமசிவாய – புத்தி வித்தை மேம்படும்.
நமசிவாய – பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவாய – வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவாய – நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவாய – கடன்கள் தீரும்.
நமசிவாயவங் – பூமி கிடைக்கும்.
சவ்வுஞ்சிவாய – சந்தான பாக்யம் ஏற்படும்
சிங்றீங் – வேதானந்த ஞானியாவார்
உங்றீம் சிவாயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவாயநம – சிவ தரிசனம் காணலாம்
ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம்.
 லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும்
ஓம் நமசிவாய – வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவாயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும்.
ஓம் ஸ்ரீறியும் சிவாயநம – அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவாய – சிரரோகம் நீங்கும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..