கல்யாண விரதம் Share

பங்குனி உத்திரத்தன்று இருக்கப்படும் விரதம் இதுவாகும். முருகனுக்குரிய பங்குனி உத்திர நாளில்தான் பலவித சுபகாரிய நிகழ்ச்சி நடந்துள்ளது.

ஐயப்பன் பிறந்தது, இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது, காஞ்சியில் அம்மன் ஆற்றுமணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளை பெற்றது.

ராமர் சீதையை மணந்தது, லட்சுமணன் சத்ருகன் ஆகியோருக்கும் திருமண நடந்தது. திருப்பரங்குன்றத்தில் முருகன், தெய்வானை திருமணம் நடந்தது. ஆண்டாள், ரங்கமன்னார் திருமணம் நடந்தது, அர்ச்சுனன் பிறந்தது, ரதிக்காக சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்தது அனைத்தும் பங்குனி உத்திர நாளில்தான் நடைபெற்றது.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் தள்ளிப்போவதை தடுக்க ஆணோ, பெண்ணோ இவ்வளவு மங்களகரமான ஒரு நாளில் இறைபக்தியோடு உபவாசம் இருப்பது நிச்சயம் நல்ல பலன்களை தரும் என்பது உண்மை.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..