1942–ல் மும்பையில் இருந்து இங்கிலாந்து சென்றபோது 100 டன் வெள்ளி நாணயத்துடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு Share

1942–ம் ஆண்டு 2–ம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த வெள்ளைக்காரர்கள் போருக்காக இந்தியாவில் ஏராளமான நிதி திரட்டினார்கள்.

 

அதில் 100 டன் வெள்ளி காசுகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று மும்பையில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டது. இந்த கப்பல் எகிப்து அருகே 712 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது ஜெர்மனி கப்பல் ஒன்று அதை தாக்கி மூழ்கடித்தது.

அந்த கப்பல் எங்கே மூழ்கி கிடக்கிறது என்பது தெரியாமல் இருந்து வந்தது. இதுபற்றி இங்கிலாந்து தேடுதல் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் கப்பல் மூழ்கி கிடக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

நீச்சல் வீரர்கள் அந்த கப்பலுக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது வெள்ளி நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை வெளியே எடுத்து வருகிறார்கள். நாணயங்கள் கடல் நீர் உப்பினால் சற்று சேதம் அடைந்துள்ளன. இருந்தாலும் நல்ல நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறினார்கள்.

கப்பலில் உள்ள வெள்ளி நாணயங்களின் இப்போதைய மதிப்பு ரூ.300 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..