அப்பிள் வாட்ச்: யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் Share

அப்பிள் நிறுவனத்தின் புதிய கருவியான அப்பிள் வாட்ச் பற்றிய சில முக்கியமான தகவல்களை பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

 

* அப்பிள் வாட்ச் (Apple Watch) வடிவமைப்பில் ஹாரோலோஜி பாரம்பரியம் கலந்திருப்பதோடு பார்க்க தனித்துவம் வாய்ந்ததாக காட்சியளிக்கின்றது.

* ஐபோன்களை போன்றே அப்பிள் வாட்ச்களின் டிஸ்ப்ளே உறுதியாகவும் கீறல் படாதவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* அப்பிள் வாட்சில் உள்ள கஸ்டம் ஃப்ரன்ட் தொழில்நுட்பம் சிறிய டிஸ்ப்ளேவில் வார்த்தைகளை துள்ளியமாகவும் தெளிவாகவும் காண்பிக்கும்.

* தனித்துவம் வாய்ந்த அனுபவத்தை வழங்க அப்பிள் நிறுவனம் பல நிபுணர்களின் ஆலோசனைகளை பரிசீலனை செய்து அதற்கேற்ப ஆப்பிள் வாட்சை உருவாக்கியுள்ளது.

* புதிய வகை வடிவமைப்பின் மூலம் ஆப்பிள் வாட்ச் சூரிய புகைப்படத்தை கொண்டு அதற்கேற்ப நேரத்தை காண்பிக்கும்.

* அப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேவில் ஒவ்வொரு முறை உங்களது மணிக்கட்டை தூக்கும் போதும் அழகிய பூ மலர்வது போன்ற வீடியோ படம் தெரியும்.

* அப்பிள் வாட்சில் 2 பொத்தான்கள் (Buttons) மட்டுமே உள்ளன. மற்ற படி அனைத்துமே தொடு திரையாக (Touch Screen) அமைந்துள்ளது.

* அப்பிள் வாட்சை ஒரு முறை முழுவதும் ஜார்ச் செய்தால் போதும், 18 மணிநேரம் பயன்படுத்த முடியும்.

* அப்பிள் வாட்ச் மூன்று வடிவமைப்புகளில் (Apple Watch Sport, the Apple Watch, Apple Watch Edition) கிடைக்கிறது.

* ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேவில் (Display) தெரியும் ஆப்ஸ்களை (Apps) உங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து கொள்ளலாம்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..