19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்ட பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் Share

ஐபிஎல் தொடரின் 16-வது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்கு 210 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில், அந்த அணியின் தொடக்க வீரர்களாக ’சரவெடி’ கெயிலும் பிஸ்ராவும் களமிறங்கினர்.

 அதிரடிக்கு பேர் போன கெயில் வழக்கத்திற்கு மாறாக வெகு நிதானமாக ஆடியது பெங்களூர் ரசிகர்களைக் கடுப்பேற்றியது.

பிஸ்ரா 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து 5வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழக்க, 24 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கிறிஸ் கெயிலும் பிஸ்ராவைத் தொடர்ந்து வெளியேறினார். கேப்டன் விராட் கோலி 18 பந்துகளைச் சந்தித்து சரியாக 18 ரன் எடுத்து வெளியேறினார்.

அடுத்தடுத்து வந்த வீரர்கள் மும்பை இந்தியன்சின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணற டீ வில்லியர்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி என்று 44 ரன்களைக் குவித்தார். ஆனால் அவரும் பும்ராவின் பந்து வீச்சில் போலார்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக இனி ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே பெங்களூர் அணி வெற்றி பெறும் என்ற நிலை உருவானது. இருப்பினும் வீஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 47 ரன்கள் குவித்தும் அவருடன் இணைந்து விளையாட யாரும் இல்லாததால் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..