முக்கிய விரதங்களை இருக்க முடியாமல் போனால் Share

தற்காலத்தில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. பொதுவாக ஆண்களை விட பெண்கள் விரதம் இருப்பதில் வல்லவர்கள்,குடும்பம் நன்றாக இருக்க,லட்சுமி கரமாக இருக்க,

மாங்கல்ய பலம் நிலைக்க என இவர்களின் விரதம் எண்ணிக்கையில் அடங்காது.

வேலைக்கு செல்லாத குடும்ப பெண்கள் எளிதில் விரதம் இருந்து  விடுகின்றனர்.வேலைக்கு செல்லும்
பெண்களால் அப்படி இருந்து விட முடிவதில்லை.எனவே, குறிப்பிட்ட தினத்தில் விரதம்,பூஜை மேற்கொள்ள நினைக்கும் பெண்கள் காலையில் சீக்கிரம் எழுந்து அனைத்தையும் செய்யலாம். அல்லது அலுவலகத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய பின்னர் மீண்டும் குளித்து விட்டு, விளக்கேற்றி பூஜைகள் மேற்கொள்ளலாம். இதில் தவறில்லை.

ஆனால் விரதம், பூஜை செய்ய வேண்டிய நாட்களில் செய்யாமல் அவற்றை ஓரிரு நாட்கள் தள்ளி விடுமுறை நாளில் செய்வதில் பலனில்லை.அன்றே எவ்வளவு நேரமானாலும் முடித்துவிடவேண்டும்.

ஒருவேளை காலையில் பூஜை செய்யும் போது முக்கிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்களை கூற முடியாத பட்சத்தில், பூஜையை வீட்டில் முடித்து விட்டு, வாகனத்தில் செல்லும் போது இறைவனை நினைத்து அந்த மந்திரங்களை மனதிற்குள் ஜெபிக்கலாம். இதற்கும் உரிய பலன் கிடைக்கும். 

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..