டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எனது கனவு: டேவிட் மில்லர் Share

ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்துள்ள தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் அளித்த ஒரு பேட்டியில்,

‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும். அதனை நிறைவேற்ற கடுமையாக உழைத்து வருகிறேன். எனது கனவு நனவாக சில காலம் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும்.

இருப்பினும் அந்த வாய்ப்புக்காக தான் தயாராக காத்து இருப்பேன்’ என்றார். 25 வயதான டேவிட் மில்லர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..