மாந்தி தோஷ பரிகாரம் Share

ஜாதக ரீதியாக மாந்தி என்பவர் பல்வேறு தோஷங்களுக்கு காரணமாகி பல்வேறு இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகிறார்.

நம்முடைய ஜாதக முறையில் மாந்தியை பற்றி அதிகம் ஆராய்வது இல்லையென்றாலும், கேரள ஜோதிட முறையில் இது அதிகம் பார்க்கப்படுகிறது.

சனீஸ்வரரின் புதல்வர் என்று சொல்லப்படும் மாந்தி ஏதாவது ஒரு கிரகத்துடன் சேரும்போது அது தீய கிரகமாக இருக்கும் பட்சத்தில் கடும் தொல்லைகளை மனதில் வலிகளையும் கொடுத்து வரும்.

ஜாதக ரீதியாக மாந்தியால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெறும் கோவிலான திருவிடை மருதூர் கோவில் சென்று அங்கே நந்திப்பரிகாரத்தை 18 முறை செய்யவேண்டும்.

மனதிற்குள் மாந்தியால் ஏற்படும் தோஷம் விலகவேண்டும் என சிவனிடம் பிரார்த்தனை செய்து அங்கு சிவன் சன்னதியில் 108 நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

பின்பு அங்குள்ள அம்பிகையை வணங்கி விட்டு மற்ற தெய்வங்களையும் வணங்கி விட்டு சென்ற வாசல் வழியாக திரும்ப செல்லாமல் வேறு வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..