ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் காஷ்யப் 3-வது சுற்றுக்கு தகுதி Share

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி சீனாவின் வுஹான் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப், சீன தைபே வீரர் ஜென் ஹாக்சுவை சந்தித்தார்.

1½ மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தில் காஷ்யப் 15-21, 21-18, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3-வது சுற்று ஆட்டத்தில் காஷ்யப், சீன வீரர் ஷென்மிங் வாங்கை எதிர்கொள்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-6, 21-5 என்ற நேர்செட்டில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை அனைட்டை எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். காயத்தில் இருந்து மீண்டு 2 மாதத்துக்கு பிறகு களம் கண்ட சிந்து வெற்றிக்கு 16 நிமிடமே எடுத்து கொண்டார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..