இந்து சமுத்திரத்தில் இப்படியும் ஒரு மர்ம தீவு! Share

இந்து சமுத்திரத்தில் உள்ள சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினத்தவர்கள் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

அத்தீவில் வாழ்வோர் இதுவரையில் வெளிஉலகத்துடன் சிறிதும் தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்தியாவின் அந்தமான் நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அங்கு வாழ்கின்றனர்.

மிகவும் அழகுநிறைந்த அத்தீவு வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பற்ற தீவாக உள்ளது. வெளியுலகை சேர்ந்தவர்கள் அனைவரையும் அங்கு வசிக்கும் பழங்குடியினர் எதிரிகளாகவே பார்க்கின்றனர். அவர்களுடன் வெளியுலகத்தினர் யாரும் தொடர்பு கொள்ள முடியாது.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தமும் இத்தீவை தாக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அச்சந்தர்ப்பத்தில் அத்தீவுக்கு மீட்புப் பணிகளுக்காக சென்ற இந்திய ஹெலிகொப்டரை நோக்கி அப்பழங்குடியினர் கற்களையும் , அம்பையும் எரிந்துள்ளனர்.

இதேபோல் 2006 ஆம் ஆண்டு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 2 பேரை அவர்கள் கொன்றுள்ளனர்.அவர்களின் வாழ்க்கை முறை தொடர்பான தெளிவான விளக்கம் வெளியுலகினருக்கு கிடையாது காரணம் அவர்கள் யாரையும் அங்கு அனுமதிப்பதில்லை.  

தீவை சுற்றிலும் 3 மைல்கள் தொலைவை பாதுகாக்கப்பட்ட இடமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

அத்தீவுவாசிகள் பார்ப்பதற்கு ஆப்பிரிக்கர்களை போல இருகின்றனர். இவர்கள் கடலுணவுகளை உண்டு வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பழங்குடியின மக்களை தொடர்பு கொள்ள இந்திய அரசானது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனினும் அவை அனைத்தும் தோல்வியிலே முடிந்தது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..