வங்காளதேசத்துக்கு எதிரான தோல்விக்காக அவசர நடவடிக்கை எடுக்க மாட்டோம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு Share

வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்து பாகிஸ்தான் மோசமான தோல்வியை தழுவியது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் ஷகாரியார் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி ‘ஒயிட் வாஷ்’ ஆனது பாகிஸ்தானில் உள்ள எல்லா ரசிகர்களையும் போல் எனக்கும் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்த தோல்விக்காக அவசர கோலத்தில் நடவடிக்கை எடுத்து எந்தவித பயத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. போட்டி தொடர் முடிந்ததும் எல்லா அம்சங்களையும் ஆய்வு செய்து முடிவு மேற்கொள்வோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..