போர்ஸ்ச் டென்னிஸ் கிராண்ட்பிரி போட்டி: சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு முதல் தோல்வி Share

மொத்தம் ரூ.4½ கோடி பரிசுத்தொகைக்கான போர்ஸ்ச் டென்னிஸ் கிராண்ட்பிரி போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்து வருகிறது.

இதன் பெண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் மார்ட்டினா ங்கிஸ் (சுவிட்சர்லாந்து)-சானியா மிர்சா (இந்தியா) ஜோடி, பெட்ரா மார்ட்டிக் (குரோஷியா) ஸ்டெபானி வோட் (லிச்டென்ஸ்டெயின்) இணையுடன் மோதியது.

இதில் 3-6, 3-6 என்ற நேர் செட்டில் சானியா-ங்கிஸ் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. சமீபத்தில் மார்ட்டினா ங்கிசுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்த சானியா மிர்சா வரிசையாக இண்டியன்வெல்ஸ், மியாமி, சார்லஸ்டன் ஆகிய போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், இரட்டையர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து வரலாறும் படைத்தார்.

ஜோடியாக கைகோர்த்த பிறகு இவர்கள் சந்தித்த முதல் தோல்வி இது தான். சானியா- ஹிங்கிசின் வெற்றிப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மார்ட்டிக்-ஸ்டெபானி இப்போது தான் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..