வளைந்த திரையுடன் LG G4 கைபேசி அறிமும் Share

LG நிறுவனம் இந்த வருடத்தில் வளையும் தன்மைகொண்ட LG G Flex 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

 

இந்நிலையில் தற்போது வளைந்த திரையினைக் கொண்ட LG G4 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் திரையானது 5.5 அங்குலமாக காணப்படுவதுடன் மேலிருந்து கீழாக 300 மில்லி மீற்றர்கள் வரை வளைந்ததாக காணப்படுகின்றது.

மேலும் இக்கைப்பேசியில் Octa Core Qualcomm Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

இதேவேளை சேமிப்பு நினைவகமானது microSD Card உதவியுடன் 2TB வரை அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இவை தவிர 16 மெகாபிக்சல்களை(Megapixel) உடைய பிரதான கமெராவினையும் உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசி இம்மாதம் 28ம் திகதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..