ஐபிஎல் 8: பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி Share

சென்னை அணி, பஞ்சாப் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் சீசன் 8 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணி மோதின.

 முன்னதாக  டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..