எவரஸ்ட் சிகரத்தின் சில பகுதிகள் உடைந்து வீழ்ந்துள்ளன Share

நேபாளத்தில் இன்றைய தினம் பிறிதொரு பாரிய புவியதிர்வு காத்மண்டுவுக்கு அருகில் உள்ள தெற்கு கோதாரி பிரதேசத்தில் உணரப்பட்டுள்ளது.


அந்த புவியதிர்வு 6.7 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்ற 7.9 ரிச்டர் அளவிலான புவியதிர்வை அடுத்து 65 சிறு அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், இன்றைய அதிவின் பின்னர் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில், அனர்த்தங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4600 ஐயும் கடந்துள்ளது.
நேபாளத்தில் இன்று உணரப்பட்ட புவியதிர்வை அடுத்து புதுடில்லியில் தொடரூந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
புதுடில்லியிலும் புவியதிர்வின் தாக்கம் உணரப்பட்ட நிலையில் இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனர்த்தங்கள் காரணமாக வீடுகள், ஆலயங்கள், பாரிய கட்டிடங்கள் முற்றாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த நிலையில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வரலாற்று சிறப்பு மிக்க 9 மாடிகளைக் கொண்ட தரஹாரா கோபுரம் சரிந்து வீழ்ந்ததில் அதில் புதையுண்ட நூற்றுக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், எவரஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த அனர்த்தங்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்று தெற்கு கோதாரி பகுதியில் உணரப்பட்ட 6.7 ரி;ச்டர் அளவிலான புவியதிர்வின் தாக்கம் எவரஸ்ட் சிகரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..