சந்திரபகவான் அருள் பெற பெளர்ணமி விரதம் Share

அத்திரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் பிறந்தவர் சந்திர பகவான் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும் சந்திர பகவான், மகாவிஷ்ணுவின் இதயத்தில் இருந்து பிறந்தவர் என்றும்,

அமுதம் பெறுவதற்காக திருப்பாற் கடலைக் கடைந்தபோது, அந்தக் கடலில் இருந்து லட்சுமி தேவிக்கு முன்னதாக பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன.

எப்படி இருந்தாலும் நவக்கிரகங்களில், சந்திரன் சுபக் கிரகம் ஆவார். இவர் சிவபெருமானின் மூன்று கண்களில் இடது கண்ணாகவும், மன்மதனுக்கு வெண் கொற்றைக் குடையாக இருப்பவர். பதினாறு கலைகளை கொண்டவர்.

மூன்று நாடிகளில் இடக்கலை நாடியாக இருப்பவர். பயிர்களுக்கு தலைவர். பராசக்தியின் அம்சமாக விளங்குபவர். அழகியில் மேம்பட்டவர். உயிர்களுக்குப் போகத்தை ஊட்டுபவர், மூன்று குணங்களில் சாத்வீக குணத்தைப் பெற்றவர். இப்படி பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட சந்திர பகவானின் அதி தேவதை வருண பகவான் ஆவார்.

பவுர்ணமி நாளில் விரதம் இருந்து, வெள்ளை வஸ்திரம் மற்றும்  அரிசியை பிறருக்கு  தானமாக வழங்கினால் சந்திரக் கிரக தோஷம் நிவர்த்தியாகும்.  

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..