சித்திரை அன்று செவ்வாய் விரத வழிபாடு Share

நட்சத்திரக்காரர்களுக்குரிய கிரகம் செவ்வாய். செவ்வாயை வழிபட்டால் பல்வேறு பலன்கனை பெறலாம். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதால்

குறைபாடுகள் நீங்க வாய்ப்பு உண்டென்று சொல்லப்படுகிறது. 

காலையில் அம்மனையும், மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம்வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று 

வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள் போர் தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள்நிலம் தனில் அளிக்கும் குசன்
நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி! போற்றி! 

என்று தோத்திரம் சொல்லி வணங்கினால் மேற்கூறியபடி தோஷநிவாரணம் ஏற்படுவதோடு அம்மனின் அருள் கிடைக்கும். ரத்த சம்பந்தமான நோயும் நீங்கும். வெற்றி கிட்டும். குறிப்பாக இவ்விரதத்தை அனுசரிக்கும் கன்னிப் பெண்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..