சிறந்த வீரர்களை கொண்ட அணியாக கொல்கத்தா திகழ்கிறது: சென்னை பயிற்சியாளர் பிளமிங் சொல்கிறார் Share

ஐ.பி.எல். சீசன் 8 கிரிக்கெட் திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது.

 ராஜஸ்தான் அணியிடம் மட்டும்தான் தோல்வி அடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி நாளை மறுநாள் (29-ந்தேதி) ஈடன் கார்டனில் இரவு 8 மணிக்கு உள்ளூர் அணியான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறியதாவது:-

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மிகவும் சிறந்த வீரர்களை கொண்ட அணியாக திகழ்கிறது. அவர்களுடன் நாங்கள் நல்ல போட்டிக்கு தயாராக உள்ளோம். அவர்களுக்கு எதிராக இரண்டு இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளோம். இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன் லீக் டி20 போட்டியும் ஒன்றாகும். கொல்கத்தா அணியின் வீரர்கள் மற்றும் அந்த அணியின் பணியாளர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறோம்.

சென்னை அணியைப் போலவே கொல்கத்தா அணி, சிறந்த வீரர்களை கண்டுபிடித்து சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துகிறது. மோர்னே மோர்கல், அன்ட்ரே ரசல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஆக்ரோஷமான கேப்டனுடன் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இவ்வாறு பிளமிங் கூறினார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..