வார்னர், போல்ட் சிறப்பான ஆட்டம் : பஞ்சாப்பை விழ்த்தியது ஐதராபாத் அணி Share

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப்- ஐதராபாத் அணிகள் மொகாலியில் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது.


அதன்படி ஐதராபாத் அணியைச் சேர்ந்த வார்னர்- தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விகாரி 9 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் ஹென்றிக்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளியது. குறிப்பாக வார்னர் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதனால் ஐதராபாத் அணி 200 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வார்னர் 41 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது ஐதராபாத் அணி 9.5 ஓவரில் 76 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து ஐதராபாத்தின் ரன் விகிதமும் குறைய ஆரம்பித்தது. ஹென்றிக்யூஸ் 32 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, ஆசிஷ் ரெட்டி கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார். இதனால், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. ஆசிஷ் ரெட்டி 8 பந்தில் 22 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் ஜான்சன், பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் அணி. தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் மன்னன் வோரா இருவரும் இறங்கினார்கள். வோரா 5 ரன்கள் எடுத்து போல்ட் பந்து வீச்சில் அவுட் ஆனார். பஞ்சாப் குறிப்பிட்ட இடைவேளையில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது. கேப்டன் பெய்லி சிறப்பாக விளையாடினாலும் 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கில்லர் மில்லரும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இறுதியில் விக்கெட் கீப்பர் சாகா அதிரடியாக ஆடி 42 ரனக்ள் குவித்த போதும் அவரால் அணியை வெற்றி பெறவைக்க முடியவில்லை. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்து.

ஐதராபாத் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசி 4 ஒவரில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..