இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான சரியான தருணம் இன்னும் வரவில்லை Share

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவதற்கு பிரதமர் மோடி தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவ்வாறு நடக்கவாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது.



அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2016-ல் நடைபெற இருக்கிறது. அதேபோல் 2020-ம் ஆண்டு போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பல நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பேச் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார். அப்போது இந்திய தடகள வீரர்களின் செயல்பாடுகள், ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடத்துவது போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது.

இது பற்றி  தாமஸ் பேச் கூறும் போது ‘ 2024 -ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடத்துவது பற்றி பலரும் பேசுவது ஆச்சிரியமாக உள்ளது.  இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான சரியான தருணம் இன்னும் வரவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..