கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நகை பட்டறை அதிபர் Share

கோவை ஆர்.எஸ்.புரம் ராமலிங்கரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 58). நகை பட்டறை அதிபர். இன்று கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்த இவர் கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்தார்.

அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, நாகரராஜ் ஒருவரிடம் வியாபாரத்திற்காக ரூ.80 லட்சம் கடன் வாங்கியதாகவும், அவர் தற்போது கந்து வட்டியுடன் சேர்த்து ரூ.3 கோடி கேட்டு தொந்தரவு செய்வதாலும் மனமுடைந்து தூக்கு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..