தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வாலிபர் தீக்குளிப்பு Share

நாகை மாவட்டம் தலைஞாறை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் ராமதாஸ் (வயது34).

 

இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பக்கிரிசாமி இன்று காலை 11 மணிக்கு அழைத்து வந்தார்.

ஆஸ்பத்திரியின் புற நோயாளிகள் பிரிவு புதிய கட்டிடத்தில் வரிசையில் நின்ற ராமதாஸ் திடீரென தான் கொண்டு வந்த ஸ்பிரிட்டை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடலில் பரவியதும் அவர் அலறி துடித்தபடி அங்குமிங்கும் ஓடினார். பின்னர் அவர் அருகில் நின்ற மன்னார்குடி அடுத்த கருவாக்குறிச்சியை சேர்ந்த தங்கவேல் என்பவரை கட்டி பிடித்தார். இதில் அவருக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டது.

அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ராமதாஸ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமதாஸ் எதற்காக தீக்குளித்தார் என்பது தெரியவில்லை.

இது குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..