சர்வதேச மத்தியஸ்த நிலையம் கொழும்பில் திறப்பு Share

சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச தொடர்புகளின் போது சர்வதேச தரம் வாய்ந்த தொழில்முறைச் சட்டச் சேவைகளை வழங்குவதற்காக

ஆசியாவை கேந்திர நிலையமாகக் கொண்ட சர்வதேச மத்தியஸ்த மத்திய நிலையமொன்றை இலங்கையில் உருவாக்குவதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மத்தியஸ்த நிலையத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம், சர்வதேச வர்த்தகத் துறையில் இலங்கைக்கு அதிக மதிப்பு கிட்டும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
இந்த மத்தியஸ்த நிலையம், கொழும்பு உலக வர்த்தக மையக் கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் 30ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறினார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..