நடிகையுடன் குடும்பம் நடத்த கணவரை விட்டு கொடுத்த மனைவி -இப்படியுமா மனைவிக உள்ளான்க ..? Share

பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி– ஆதித்யா சோப்ராவின் திருமணம் நெருங்கிய சொந்தங்கள் புடைசூழ, இத்தாலியில் நடந்திருக்கிறது. அன்னிய நாட்டில் இந்திய முறைப்படி நடந்த அபூர்வ திருமணம். ஆதித்யா சோப்ரா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவரது முதல் மனைவி பாயலின் வாழ்த்துக்களும், ராணி முகர்ஜிக்கு கிடைத்இனி, தம்பதிகளிடம் பேசுவோம்!

ஆதித்யா சோப்ரா சொல்கிறார்…

“எங்கள் திருமணத்தில் எந்த ரகசியமும் இல்லை. என் முதல் மனைவி பாயலியிடமிருந்து விவாகரத்து பெற மூன்றாண்டு ஆகிவிட்டது. அதற்குள் ராணி முகர்ஜியின் தாயார் என்னை வாட்டி எடுத்துவிட்டார். அவர்களின் மனதிருப்திக்காக நிச்சயதார்த்தம் நடத்தி மோதிரம் அணிவித்தேன். அப்போதும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘என் மகளுக்கு வயது கூடிக்கொண்டே போகிறது ஆதி. சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கிற வழியைப்பார்’ என்று நச்சரித்தார்.

ஒருகட்டத்தில் ராணியின் அம்மா உடல் நிலை சரியில்லாமல்போக, ஒட்டுமொத்த குடும்பமும் நச்சரித்தது. தாய், மகளின் மணக்கோலத்தை விரைவில் பார்த்தாகவேண்டும் என்றார்கள். அவருடைய ஆசையை நிறைவேற்றிவிட்டேன்” என்று நெகிழ்ச்சியாக சொல்கிறார்.

ராணி முகர்ஜி என்ன சொல்கிறார், கேட்போமா..

“ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளைப் பற்றிய திருமணக் கனவுகள் உண்டு. என் பெற்றோருக்கும் அந்தக் கனவு இருந்தது. திரைப்படத்தில் வரும் திருமணக் காட்சிகளை கண்டு என் பெற்றோர் ஆதங்கப்படுவார்கள். ‘உனக்கு சினிமாவில் பல திருமணம் நடக்கிறது. நிஜத்தில் ஒரு கல்யாணம் நடக்கமாட்டேங்கிறதே!’ என்று மனவருத்தத்தோடு பல தடவை கேட்டிருக்கிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்பு சரிதான். ஏன்என்றால், என் வயது 36. இதற்கு மேல் நான் எங்கு போய் மாப்பிள்ளையை தேடுவது. ஆதித்யாவிற்கு 42 வயதாகிவிட்டது. எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என்பதை இன்னமும்கூட என்னால் நம்ப முடியவில்லை. நான் திருமதியாகி ஏதோ தேவதை உலகத்தில் நடப்பதுபோல இருக்கிறது” என்கிறார்.

ஆதித்யாவின் தாயார் புது மருமகளை மிகவும் மெச்சுகிறார். ‘‘ராணி நல்ல பெண். என் மகனுக்கு அனுசரணையாக இருப்பாள். ஊர் அறிய இப்பொழுது தான் அவள் என் மருமகள் என்றாலும், ஆதித்யாவை திருமணம் செய்துகொள்ள அவள் முடிவு எடுத்தபோதே எங்கள் வீட்டு மகாராணி ஆகிவிட்டாள். எங்கள் குடும்பத்தின் மீது ராணி வைத்திருக்கும் அன்பு அலாதியானது. என் கணவர் (யஷ்ராஜ்) மறைந்த செய்தி கேட்டு பதறியடித்துக் கொண்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஓடோடிவந்தாள். எங்களுடனேயே இருந்தாள்.

தசரா ஆரம்பித்த மூன்றாவது நாள் யஷ்ராஜ் மறைந்தார். ராணியின் குடும்பத்தில் வருடா வருடம் பாரம்பரிய முறைப்படி மிக விமரிசையாக துர்கா பூஜை நடத்துவார்கள். அவ்வாறு பூஜை நடக்கும்போது இறப்பு வீட்டிற்கு போக மாட்டார்கள். அப்படி போக நேர்ந்தால் பூஜை முடியும் வரை திரும்பி அவர்கள் வீட்டிற்கு செல்லமாட்டார்கள். ஆனால் ராணி பூஜையைக்கூட பெரிதுபடுத்தாமல் எங்களோடு வந்து தங்கிவிட்டாள். அவள் எங்களுடன் குடும்பத்தில் ஒருத்தியாக உடனிருந்தது எங்களை நெகிழவைத்தது’’ என்கிறார், உருக்கமாக!

சரி அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதல் மனைவி பாயல், தனது முன்னாள் கணவர் பற்றி என்ன சொல்கிறார், பார்ப்போமா!

“ஆதித்யா மிகவும் நல்லவர். கணவன், மனைவி இருவரும் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களது வாழ்க்கை வெற்றிகரமாக செல்லும் என்று கூறமுடியாது. அதற்கு எங்கள் திருமணம் ஒரு உதாரணம். எங்கள் இருவரில் யார் மீதும் குறை சொல்ல முடியாது. என் மாமியார்–மாமனார் என்னை மகள் போல நேசித்தார்கள். நானும் அவர்களுடைய மகிழ்ச்சிக்காக ஆதித்யாவுடன் விட்டுக்கொடுத்து வாழ எவ்வளவோ முயற்சி செய்தேன். அது முடியாத நிலையில்தான் விலகிவிட தீர்மானித்தேன்.

ஆதித்யாவின் மறுமணத்தில் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. இந்த திருமணமாவது அவருக்கு மகிழ்ச்சியைத் தரட்டும். ராணிமுகர்ஜி பண்புள்ள பெண். ஒருமுறை ராணி என்னிடம் ‘பாயல், யார் வாழ்க்கையையும் கெடுக்கும் எண்ணம் எனக்கில்லை. என்னைப் பற்றி தவறாக நினைக்காதே மன்னித்துவிடு..’ என்று தொலைபேசியில் கெஞ்சினார்.

நான் என்ன செய்வது! சரி வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று விட்டுக் கொடுத்துவிட்டேன். எனக்கு எந்த வருத்தமுமில்லை. ராணிமுகர்ஜியை சந்தித்து அவருக்கு திருமண வாழ்த்தும் கூறிவிட்டு வந்தேன்” என்கிறார் பாயல்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..