யார் பக்கம் கத்தி சாயும் – விஜய்க்கு வந்த தலைவலி Share

துப்பாக்கி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி போது, கள்ளத்துப்பாக்கி படத்தைத் தயாரித்தவர் துப்பாக்கி என்ற தலைப்பை வைக்கக் கூடாது என்று ஏ.ஆர்.முருகதாஸ், தாணு ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் துப்பாக்கி படம் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் வேறு வழியில்லாமல் கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளருக்கு 12 லட்சம் கொடுத்து படத்தை வாபஸ் பெறச் செய்ததாக அப்போது திரையுலகில் பேச்சு அடிப்பட்டது.

இப்போது அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் கத்தி படத்துக்கு கத்திச்சண்டை என்ற படம் தலைவலியாக மாறி உள்ளது.

ரவி இன்பா என்ற இயக்குனர் கத்திச்சண்டை என்ற கதையை எஸ்.நந்தகோபால் என்ற தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்கிறார்.

அவரும் கதை பிடித்துபோக, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கத்திச்சண்டை என்ற தலைப்பை பதிவும் செய்திருக்கிறார்.

ஆனால் சொன்னபடி நந்தபோபால் அவர்களால் படம் தயாரிக்க முடியவில்லை.

இதனால் ரவி இன்பா நானே இப்படத்தை தயாரித்து கொள்கிறேன் என்று நந்தகோபாலிடமிருந்த தன் கத்திச்சண்டை டைட்டிலை தன் பெயருக்கு மாற்றிக்கொள்ள கடிதம் பெற்றுள்ளார்.

அந்தக் கடிதத்துடன், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கத்திச்சண்டை என்ற தலைப்பை தன் பெயருக்கு பதிவு செய்ய சென்ற ரவி இன்பாவுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டதுநந்தகோபால் ஏற்கனவே கத்திச்சண்டை என்ற தலைப்பை ஏ.ஆர்.முருகதாஸுக்கு விட்டுக்கொடுப்பதாக கடிதம் கொடுத்துள்ளாராம்.

ஆக ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகியோர் இயக்குனர் ரவி இன்பாவை ஏமாற்றியுள்ளனர்.பழி குறும்படம் வெளியிடப்பட்டது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..