ராணிமுகர்ஜி கெஞ்சல் – கணவரை விட்டு கொடுத்த பெண் Share

ப்ளாக் என்ற படத்தின் மூலம் பிரபலமான ராணிமுகர்ஜி சமீபத்தில் யாஷ் சோப்ராவின் மகன் அதித்யவை மணந்தார் .

ஆதித்யா சோப்ரா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

அவரது முதல் மனைவி பாயலின் வாழ்த்துக்களும், ராணி முகர்ஜிக்கு கிடைத்திருக்கிறது. என்றால் பாருங்களேன்.

இதை பற்றி ஆதித்யாவின் முன்னால் மனைவி கூறுகையில்:-

ஆதித்யாவின் மறுமணத்தில் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. இந்த திருமணமாவது அவருக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.

ராணிமுகர்ஜி பண்புள்ள பெண். ஒருமுறை ராணி என்னிடம் ‘பாயல், யார் வாழ்க்கையையும் கெடுக்கும் எண்ணம் எனக்கில்லை.

என்னைப் பற்றி தவறாக நினைக்காதே மன்னித்துவிடு..’ என்று தொலைபேசியில் கெஞ்சினார்.

நான் என்ன செய்வது! சரி வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று விட்டுக் கொடுத்துவிட்டேன். எனக்கு எந்த வருத்தமுமில்லை.

ராணிமுகர்ஜியை சந்தித்து அவருக்கு திருமண வாழ்த்தும் கூறிவிட்டு வந்தேன்” என்கிறார் பாயல்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..