என்னடா இது ரஜினி கமலுக்கு வந்த சோதனை? Share

ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தை டிஜிட்டல் வடிவத்தில் ரிலீஸ் செய்யப் போகிறார் படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு.


அந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு மட்டுமல்ல, நான் பெரிய இடத்திற்கு வந்த பிறகும் கூட என்கிட்ட கால்ஷீட் கேட்டு வராதவர் அவர் என்று சமீபத்தில் இவரை பாராட்டியிருந்தார் ரஜினியும். அப்படிப்பட்டவருக்கு இப்போது ஒரு சிக்கல்.

பெரும் பொருட் செலவு செய்து டிஜிட்டலில் இந்த படத்தை உருவாக்கியிருக்கும் இவருக்கு இதுதான் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. பிரபல சேனல் ஒன்றிடம் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமை இருக்கிறதாம். இவர் ரிலீஸ் செய்யும் நேரம் பார்த்து படத்தை டி.வி யில் ஒளிபரப்ப உத்தேசித்திருக்கிறார்களாம் அவர்கள். பதறிப்போன ராஜ்கண்ணு, தயாரிப்பாளர் சங்கத்தின் உதவியை நாடியிருக்கிறார். நட்பின் அடிப்படையில் சேனலிடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..