உலகின் செக்ஸி பெண்ணாக தீபிகா படுகோன் தெரிவு Share

இங்கிலாந்தில் வெளியாகும் FHM என்ற மாத இதழ், உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் போன்ற ஜனரஞ்சகமான பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பிரிவிற்காக நடத்தப்பட்ட இந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய பதிப்பில் தீபிகா இடம்

 

இந்தத் தேர்வு குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, தன்னுடைய வெளித்தோற்றம் மட்டுமே இந்தத் தேர்வுக்குக் காரணமாக இருந்திருக்க முடியாது, தான் செய்த பணிகளும், தனக்குக் கிடைத்த வித்தியாசமான கதாபாத்திரங்களின் சிறப்புமே இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியும் என்று கூறினார்.

கடந்த 2, 3 வருடங்களாக நான் செய்துவந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாகும். இதனுடன் இணைந்த புறத் தோற்றமே எனக்கு இந்த இடத்தைப் பெற்றுத் தந்திருக்கமுடியும் என்று தான் கருதுவதாக தீபிகா குறிப்பிட்டார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக காத்ரீனா கைப் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.

இவர் சமீபத்தில் தமிழில் ரஜினியுடன் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து நடிக்கும் ‘பைண்டிங் பான்னி’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின் தன்மை தற்போது வெளிவந்துள்ளது. ஹோமி அட்ஜானியா இயக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் கபூர், நஸ்ருதீன் ஷா, டிம்பிள் கபாடியா ஆகியோரும் இவருடன் நடிக்கின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..