Loading...

பாவம் போக்கும் அயன்புரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோவில் Share

சென்னையில் அயனாவரம் என்றழைக்கப்படும் இப்போதைய பகுதி ஆதி புராணக் காலத்தில் பிரம்மபுரி என்று அழைக்கப்பட்டது. பிரம்மன் (அயன்) இங்கு வீற்றிருந்து சிவனுக்கும், பெருமாளுக்கும் 9 கோவில்கள் கட்டியதாக புராணம் கூறுகிறது. பிரம்மன் (அயன்) இத்தலத்தில் இருந்ததால் அவர் பெயராலே இந்த ஊர் அயனாவரம் என்றானது.

விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர், தன் தந்தை ஜமத்கனி முனிவர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தன் தாய் ரேணுகாதேவி தலையை வெட்டிக் கொன்றார். அந்த சாபம் நீங்கும் பொருட்டு அவர் அயன்புரம் தலத்துக்கு வந்தார். கோவில் முன்புள்ள பிரம்மதீர்த்தத்தில் தினமும் குளித்து லிங்கத்துக்கு பூஜை செய்து வழிபட்டார்.

இதனால் ஈசன் அருளால் பரசுராமரை பீடித்திருந்த தோஷம், பாவம் நீங்கியது. பரசுராமருக்கு அருளிய ஈசன் என்பதால் இத்தலத்து ஈசன் பெயர் பரசுராம லிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படலாயிற்று. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த லிங்க மேனியை சுற்றி சோழ மன்னர்கள் கோவில் கட்டினார்கள். பிறகு பல்லவ மன்னர் கள் ஏராளமான திருப்பணிகள் செய்தனர். சமீப காலத்தில் இத்தலம் புதுப்பொலிவுப் பெற்றுள்ளது. சிறப்புடைய பழமையான இத் தலத்தின் தூணில் எங்கோ பரசுராமர் இருப்பதாக சொல்கிறார்கள்.

சுற்று சுவர் கட்டியதால் அவர் தூணில் மறைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த ஈசனை வழிபட்டு, தோஷம் நோக்கிக் கொண்ட பரசுராமரை சிற்பத்தில் காண முடியாதது ஏமாற்றமாகத் தான் உள்ளது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பரசுராம ஜெயந்தி தினத்தன்று இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com