Loading...

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில் Share

108 திவ்யதேச திருத்தலங்களுள் 22-வது திவ்ய தேச மாக விளங்கு கிறது மயிலாடுதுறை திருஇந்தளுர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில். இக்கோயிலின் பழமை இங்குள்ள சிற்பங்களில் தெரிகிறது.

திருமங்கையாழ் வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இத்தலம், ஸ்ரீ ரங்கநாதர் சிறப்புடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பஞ்சரங்க திருத்தலங்களுள் ஒன்றாகவும் உள்ளது.  
நான்கு வேதங்களையும் ராட்சதர்கள் இருவர் கடலுக்கடியில் சென்று ஒளித்து வைத்து விட்டனர். அந்த வேதங்களைக் காப்பதற்காக விஷ்ணு மீன் வடிவம் கொண்டு ராட்சதர்களை அழித்து வேதங்களை காப்பாற்றி, அவற்றை இத்தலத்தில் பழைய வடிவத்திற்கு கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது. இக்கோயில் சிற்பங்களும் பேரழகு நிறைந்ததாக விளங்குகின்றன. கோயில் கோபுரத்தை தாண்டி கொடிமரம் தாண்டிய உடனேயே பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன.

மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராமர் அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என அவதாரங்களின் அணிவகுப்பு. பெருமாளின் அவதாரங்கள் நமக்கு உணர்த்துவது ஒரு உன்னத தாத்பர்யம். மீன் போன்ற சிறிய மச்ச வடிவத்தில் ஆரம்பித்து,

அடுத்து சற்று பெரிய ஆமையாக கூர்ம வடிவத்தில், பின் அதனைவிட சற்று பெரிய பன்றி வடிவம் வராகமாய், பின்னர் மனிதனும் விலங்கும் சேர்ந்த அமைப்பு நரசிம்மராய், பிறகு சிறிய வடிவிலான வாமணனாக மனித வடிவம், பின்னர் காட்டுவாசி போல வாழ்ந்த பரசுராமன், அதன்பின் மனிதன் இத்தகைய பண்புகளுடன்தான் வாழவேண்டும் என்று உணர்த்திய ராம அவதாரம், பலம் பொருந்திய வடிவில் பாலராமராக, மனிதன் தனக்குள்ளேயே இறைவனைக் காணலாம் என்னும் தத்துவத்தை உணர்த்த எளிய மனிதப் பிறவி எடுத்து நம்மிடையே வாழ்ந்து அனைவருக்கும் நண்பராக விளங்கிய கண்ணன், அநியாயங்களை அழிக்க பிறவி எடுக்கப் போகும் கல்கி அவதாரம் என மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியை தசாவதார சிற்பங்கள் வழியாக இங்கு மிக, மிக சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com