சாப தோஷம் நீக்கும் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் Share

நூற்றெட்டு வைணவத் தலங்களில் ஒன்றாகவும்; விஷ்ணு சுயம்புமூர்த்தியாக அவதரித்த எட்டுத் தலங்களில் ஒன்றாகவும்; ராகு- கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பூர்வஜென்ம சாப தோஷம், புத்திர சோகம், திருமண தோஷம் உள்ளிட்ட பல்வேறு சாப தோஷம் நீக்கும் தலமாகவும் திகழ்கிறது ஸ்ரீமுஷ்ணம் பூவரா

பூமியைக் கவர்ந்துசென்று கடலுக்கடியில் ஒளித்துவைத்தான் இரண்யாட்சன். திருமால் வராக அவதாரமெடுத்துவந்து தன் கோரைப்பற்களால் பூமியை மேலே கொண்டுவந்ததுடன், இரண்யாட்சனையும் தோற்றோடச் செய்தார். பூவராகர் கடலிலிருந்து வெளிப்படும்போது அவரது கண்களிலொன்று அரசமரமாகவும், மற்றொரு கண் துளசியாகவும் வெளிப்பட்டதென்பது ஐதீகம். ஸ்ரீமுஷ்ணத்தில் அரசமர வடிவிலும் மூலவராகவும் பூவராகர் வழிபடப்படுகிறார்.

மரத்தின் அடிப்பகுதியில் லட்சுமி நரசிம்மர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திருமால் வராக அவதாரமெடுத்து பூமியை மீட்டு வருகையில் அவரது உடலிலிருந்து சிந்தும் வியர்வை ஒரு குளமாக மாறும். அதன் கரையில் வராக மூர்த்தியின் அம்சமாக ஒரு அரசமரம் திகழும். அந்தக் குளத்தில் நீராடிவந்து அரசமரத்தை வணங்கினால் சாபவிமோசனம் கிடைக்கும். வராக அவதாரமெடுத்துவந்து, வருணனுக்கும் அஸ்வத்த மூர்த்திக்கும் சாபவிமோசனமளித்த பெருமாளே இவ்வாலயத்தின் மூலவராகத் திகழ்கிறார்.

இக்கோவிலுக்கு தென்கிழக்குப் பகுதியிலுள்ள அரசமரம் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. தென்மேற்கில் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கும் சீதாராமனின் சந்நிதி அமைந்துள்ளது. ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் மூலவர் பூவராகர், அமிர்தவல்லித் தாயார், சப்தகன்னிமார்கள், வராகருக்கு கிழக்கே கோவில் கொண்டுள்ள அரிபுரீஸ்வரர், தென்கிழக்கில் திருமால் அம்சமாக விளங்கும் அரசமரம், லட்சுமிநரசிம்மர், கோவில் பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் சீதாப்பிராட்டியோடு கம்பீரமாக காட்சியளிக்கும் ராமர் என அனைவரையும் வழிபடவேண்டும்.

அப்போதுதான் முழுப்பலன் கிடைக்கும் என பக்தர்களுக்கு வழிகாட்டுகிறார். தோஷமனைத்தும் போக்கும் பூவராகரை வழிபட்டு, ராமனின் பட்டாபிஷேக கோலத்தைக் கண்டுகளிக்க ஒருமுறை ஸ்ரீமுஷ்ணம் சென்று வரலாமே!

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com