Loading...

ஸ்ரீ நாக சாயி மந்திர் Share

இந்த ஆலயத்ம கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் ஒரு குடில் போல செயல் பட்டு வந்த இக்கோவில் தற்போது மிக விஸ்தாரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு துனி எனப்படும் ஹோம குண்டம் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கும்

நாக மண்டபத்தில் பொன் மற்றும் வெள்ளியில் ஆன தகடுகள் பதிக்கப்பட்ட மண்டபத்தில் சாயி அவர்களின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பூஜையில் ஒரு நாகம் வந்ததால் ஸ்ரீ சாயி பகவான் அவர்களின் லீலை என்று பக்தர்கள் வணங்கி பின்னர் அந்த நாகம் மறைந்த இடத்தில்தான் மண்டபம் கட்டி சாய்பாபாவின் திருவுருவ சிலை வைத்து வணங்குகின்றனர். 

இதனால் தான் நாக சாயி மந்திர் என இக்கோவில் அழைக்கப்படுகிறது. இங்கு தினமும் காலை 5 மணி முதல் ஆரத்தியும், 11 மணிக்கு அபிஷேகமும் நடைபெறும். வியாழன்தோறும் இங்கு சிறப்பு பூஜை செய்யபடுகிறது. அன்னதானம் மதிய வேளைகளில் நடைபெறும். இக்கோவிலை அடுத்து விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் மற்றும் நவகிரககங்கள் சந்நிதிகளும் இருக்கின்றன. ஒரு அரசமரமும் இருக்கின்றன. 

இக்கோவிலுக்கு செல்லும் வழி : காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து மருதமலை, துடியலூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் சாய்பாபா கோவில் செல்லும். 3 கிலோ மீட்டர் தூரம் தான். கோவிலுக்கு உள்ளே சாய் பகவான் பாடல்கள், போட்டோக்கள் கிடைக்கும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com