விண்வெளியில் இரண்டாவது ஆய்வகத்தை நிலைநிறுத்த தயாராகிவரும் சீனா Share

வல்லரசு கனவில் மிதந்துவரும் சீனா, ராணுவ பலத்தை அதிகரித்து வருவதுடன் விண்வெளி ஆய்வுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

அவ்வகையில், விண்வெளியை கண்காணிக்க ஏற்கனவே ஒரு ஆய்வுக்கூடத்தை அங்கு நிலைநிறுத்தியுள்ள சீனா, இந்த ஆண்டில் இரண்டாவதாக டியாங்காங்-2 என்ற ஆய்வுக்கூடத்தை விண்வெளியில் அமைப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, விண்வெளி வீரர்களை சுமந்துச் செல்லும் ஷென்ஸோ-11 என்ற விண்கலத்தையும் தயாரித்துவரும் சீனா, அந்த விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி டியாங்காங்-2 ஆய்வுக்கூடத்தில் இருந்தபடி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
மேலும், தனது பகைநாடான ரஷியாவின் மிர் விண்வெளி ஆய்வு மையத்துக்கு போட்டியாக, வரும் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையத்தை நிறுவவும் சீனா திட்டமிட்டுள்ளது.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com