புதிய வடிவமைப்பில் பேஸ்புக் மெசஞ்சர் Share

பேஸ்புக் சமூக வலைத்தளமானது பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டு தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகின்றது. இந்நிலையில் பயனர்களுக்காக புதிய அம்சங்கள் மற்றும் அப்பிளிக்கேஷன்களை பேஸ்புக் அறிமுகம் செய்துவருகின்றமை அறிந்ததே.

சமீபத்தில் கூட லைக் செய்வதற்கு பதிலாக புதிய பட்டன்களை அறிமுகப்படுத்தி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக அன்ரோயிட் சாதனங்களுக்கான மெசஞ்சரின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

இதன் பழைய வடிவமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்தி Google Material Design எனும் புதிய வடிவமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப் புதிய பதிப்பு கண்கவர் வடிவத்தில் காணப்படுவதுடன், இலகுவாக கையாளக் கூடியதாகவும் இருக்கின்றது.

குறித்த வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு கூகுள் பிளே ஸ்டோர் தளத்திற்கு விஜயம் செய்து புதிய பதிப்பினை நிறுவிக்கொள்ள முடியும்.

இணையத்தள முகவரி - https://play.google.com/store/apps/details?id=com.facebook.orca&hl=en_GB

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com