ஐபோன் வேகத்தை அதிகரிக்கும் வழி Share

கணினிகளுக்கு இணையாக பல அம்சங்கள், வசதிகளை உள்ளடக்கியுள்ள ஐபோன்களுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது.

ஆனால் சிலசமயங்களில் அதன் செயல்பாட்டு வேகம் குறைவதால் பயனாளர்கள் வருத்தமடைகின்றனர், தாங்கள் நினைப்பதை உடனுக்குடன் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இப்படி செயல்பாட்டு வேகம் குறைவதற்குப் பல விஷயங்கள் காரணமாக இருந்தபோதும், முக்கியமாக ஒன்று கூறப்படுகிறது. அதாவது, அனிமேஷன்கள் தான் ஐபோன்களை மந்தமாக்கிவிடுகிறதாம். ஐபோன்களில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களில் உள்ளடங்கியுள்ள அனிமேஷன்களே வேகக்குறைவுக்குக் காரணமாக உள்ளன என்கின்றார்கள்.

இந்த அனிமேஷன்களை நிறுத்துவதன் மூலமாக ஐபோன்களின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கலாம் என்பதுடன், பேட்டரி தாக்குப்பிடிக்கும் நேரத்தையும் கூட்ட முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com