அப்ரிடிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் Share

நியூசிலாந்து உடனான ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் அளித்த அமோக ஆதரவு குறித்து கேப்டன் அப்ரிடியிடம் கேட்ட போது, காஷ்மீரை சேர்ந்த மக்கள் நிறைய பேர் இங்கு வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதேபோல் முந்தைய போட்டிகளில் ஆதரவு அளித்த கொல்கத்தா ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறினார்.

காஷ்மீர் ரசிகர்கள் ஆதரவு குறித்து அப்ரிடி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். அனுராக் தாகூர் கூறுகையில், அப்ரிடி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது அரசியல் ரீதியாக சரியானது கிடையாது. இதுபோன்ற விஷயங்கள் எல்லாவற்றிலும் இருந்து வீரர்கள் ஒதுங்கி இருக்க வேண்டும். இதுபோன்ற காரணத்தினால் தான் அவர் பாகிஸ்தானிலும் விமர்சிக்கப்பட்டார் என்றார்.

ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறும் போது, இந்திய ரசிகர்களை அப்ரிடி சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். யார் சிறப்பாக விளையாடினாலும் அவர்களை எப்பொழுதும் பாராட்டும் இயல்பு கொண்டவர்கள் இந்திய ரசிகர்கள். எல்லோரும் இந்தியர்கள் தான். அவர்களை காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்று வேறுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய ரசிகர்களை பொறுத்த மட்டில் அந்த ஆட்டம் பொதுவானதாகும். எனவே விளையாட்டில் அரசியலை நுழைக்க முயற்சிப்பதை தவிர்க்கவும். எல்லா இந்தியர்களும் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள்’ என்று தெரிவித்தார்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com