Loading...

தோற்கவேண்டிய போட்டியை வென்ற இந்தியா... நன்றி தோனி Share

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

இந்தியா பேட்டிங் செய்யும் போது பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளம் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்குக்கு சாதகமாக மாறியது. அதை வங்காளதேச வீரர்கள் நன்றாக பயன்படுத்திக்கொண்டார்கள். உண்மையில் இந்த போட்டியை இந்தியா வெல்வதற்கு வாய்ப்பு இல்லை. இந்தியாவின் வெற்றிக்காக ஒட்டுமொத்த வீரர்களும் பாடுபட்டாலும், நேற்றைய போட்டியில் கேப்டன் தோனியின் பங்களிப்பை எடுத்துவிட்டால் இந்தியா நிச்சயமாக வெற்றி பெற்று இருக்காது.

தோனியின் முக்கிய துருப்புச் சீட்டான பும்ரா தான் வீசிய முதல் இரண்டு ஓவரில் 22 ரன்களை வாரி வழங்கினார். இதற்கு முக்கியமான காரணம் தமிம் இக்பாலின் கேட்சை விட்டதுதான். ஆனால் பும்ரா 19-வது ஓவரை வீசுவதற்கு முன்பாக தோனி அவரிடம் பேசி அவரது தன்னம்பிக்கையை உயர்த்தினார். விளைவு அந்த ஓவரில் 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால் வங்காளதேசம் கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்கள் நீங்கள் பும்ராவிடம் என்ன பேசினீர்கள் என்று தோனியிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த தோனி, நான் என்ன பேசினேன் என்பதை வெளியில் கூற விரும்பவில்லை. ஆனால், நான் பேசியது கண்டிப்பாக வேலை செய்தது. என்று தெரிவித்தார்.

சபிர் ரகுமான் தனது காலை தூக்குவதற்காக காத்திருந்து ஸ்டெம்பிங் செய்தது, கடைசியில் உசேன் போல்ட் வேகத்தில் ஓடிவந்து ரன் அவுட் செய்தது, சரியான இடங்களில் சரியான பீல்டர்களை நிறுத்தியது, கடைசி பந்தை யார்க்கராக போடவேண்டாம் என முடிவு செய்தது, பேட்டிங் பிடிக்கும் போது அஸ்வின் தயங்கிய போதும் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓடியது என தோற்கவேண்டிய போட்டியை இந்தியா வென்றதில் தோனியின் பங்கு மிக அதிகம். உண்மையில் ஆட்டநாயகனாக தோனி தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நான் ஆட்டநாயகன் தேர்வை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஏனென்றால் ஒரு ரன் அவுட், பேட்ஸ்மேன் அடித்த ஒரு ரன் கூட ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும் என்று தோனி கூறியது நேற்றைய போட்டியில் நிஜமானது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com