உலக கிண்ண இருபதுக்கு இருபது சுப்பர் 10 சுற்றுக்கான இன்றைய போட்டிகள்.. Share

உலக கிண்ண இருபதுக்கு இருபது சுப்பர் 10 சுற்றுக்கான மேலும் இரண்டு போட்டிகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளன. முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி மொஹாலியில் இடம்பெறவுள்ளது.
 
இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளன.
 
அதேநேரம் இதுவரையில் நடைபெற்று முடிந்த போட்டிகளின்படி, முதலாம் குழுவில் 4 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் இருக்கிறது.
 
மூன்று போட்டிகளில் பங்கு கொண்டு இரண்டு போட்டிகளில் வெற்றி கொண்ட இங்கிலாந்து அணி நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலுள்ளது.
 
இரண்டாம் குழுவில், பங்கு கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி கொண்ட நியூசிலாந்து அணி 6 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலுள்ளது.
 
மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com